Sunday, 28 August 2011

உன்னைக் கண்ட பின்னால்..

உன்னைக் கண்ட பின்னாலும்,
இமைகள் மூட முடிந்திடுமா..

என்னைக் கடந்து சென்றாயே,
நொருங்கிப் போனேன் சில்லு சில்லாய்..

சைகை செய்து நீ பேச,
பனியாய் கறைந்து போனேனே..

உன் பார்வை என் மேல்
விழுந்த நொடிகள்,
துடிக்க மறந்தது எனது இதயம்..

நீ என்னைக் காணாத 
பொழுதுகள்,
என்னை நானே வெறுத்தேனே..

Saturday, 27 August 2011

உன்னைப் போல் யாரும்
செல்லவில்லையடா
நீ சென்ற தூரம்
.
.
.
என் இதயத்தில் .. 

சில நிமிடங்கள்..

அவன் பிம்பம்
கண்களில் மறைந்தது
மனதினில் பதிந்தது..

தேடல் துவங்கியது
அவனை சந்தித்த
நிமிடங்களின் முடிவில்..

என் தேடல் பயணத்தில்,
சேகரித்தேன் பல தடயங்களை..
அவை அவனது பரிசாக்குமோ,
அல்லது என் பொக்கிஷமாகுமோ!!.

போதவில்லை
அந்த சில நிமிடங்கள்..
வேண்டும் பல வருடங்கள்!!.