Tuesday, 28 May 2013

வரம் நீ.! சாபம் நான்.!


அந்த சாலை ஓரம் பார்த்த
யாரோவொரு பெண்ணாகவே
நீ இருந்திருக்கலாம்..

உன் காதலனின் தோழன் என
உரிமையுடன் நீ பேச,
மண்ணில் அக்கணமே மௌனமாய்
புதைந்துவிடுகிறேன்..!

கனவில் கூட உன்னை என்
காதலியை பார்க்கமுடியாமல்
விழித்திருக்கிறேன்..

என் காதலை கொன்று
நான் உயிர் பெற நினைக்க,
எங்கோ என்னுள் செதுக்கப்பட்ட
உன் நினைவுகள்,
எனக்கெதிரே சதிசெய்கிறது..!

உன்னால் ஒருமுறை
நிராகரிக்கப்பட்டால் போதுமே
என் காதல் மோட்சம் அடையும்..!

Wednesday, 8 May 2013

என் கை சேர்ந்த சின்ன நிலா..


தன் பிஞ்சு விரல்களால் அவள் சிறைப்பிடித்தது
என் சிறுவிரலை அல்ல என் ஆறடியை..

பெருமிதத்தில் தூக்கிப்பிடித்தேன்,
காற்றோடு சண்டையிடும்
அவள் காலடியில் என் இதயமிருக்க..